TamilCyber.Com

ͱ Ͱͯ ()
Written by James Prabaharan   
Monday, 27 August 2007

தன் படையெடுப்புகளால் வெற்றிவாகைகள் பல சு10டி, போர்த்துக்கல் தொடக்கம் இத்தாலி வரை தன் சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்திய, பிரபல்யமான பிரெஞ் இராணுவ ஜெனரலை, ஞாபகத்தில் வைத்திருக்கின்றீர்களா? அந்த இணையற்ற இராணுவ அதிகாரியைப் போல, சுவிஸ் நாட்டிலும், இரண்டு இராட்சத நிறுவனங்கள், போட்டி போட்டுக் கொண்டு, தமது வர்த்தக ராஜ்யத்தை, விரிவுபடுத்தும் முனைப்போடு செயற்பட்டு வருகின்றன.

Read more...
உதைத்தாலும் உவகை இங்கே
Written by James Prabaharan   
Wednesday, 31 May 2006
(மிகப் பிரம்மாண்டமான அளவில், இடம்பெறப் போகும், உலகக் காற்பந்தாட்ட
வெற்றிக் கிண்ண விழா பற்றிய ஒரு கண்ணோட்டம் )

உதை வாங்குவது யாருக்குத்தான் பிடிக்கின்றது?
யாருக்குமே இல்லை. என்றாலும் இந்திய திரைப்படங்களில் செந்தில்,
கவுண்டமணியிடம் உதை வாங்கி, உதை வாங்கி பலரை வயிறுகுலுங்கச் சிரிக்க
வைத்தமை மூலம், விரும்பப்படாத இந்த உதைக்குக் கூட ஒரு பெருமை வந்து
சேர்ந்துள்ளது. அது மட்டுமல்ல, 22 பேரிடம் மாறி மாறி, தொடர்ச்சியாக  ஒரு
பந்து,  90 நிமிடங்கள் உதை வாங்கியும், இன்றைய நாட்களில் பலருக்குக்
குதூகலத்தை அளித்து வருகின்றது.. பெற்ற குழந்தை தாயின் வயிற்றில்
செல்லமாக உதைப்பதை, எந்தத் தாய்தான் விரும்பாதிருக்கின்றளாள்?
அப்படித்தான் இந்தப் பந்தும், அன்பின் மிகுதியால் தனக்கு விழும் செல்ல
உதைகள் என்று நினைத்துக் கொள்கின்றதோ தெரியவில்லை. அதைக் கற்பனையில்
விட்டுவிடுவோம்.
Last Updated ( Wednesday, 31 May 2006 )
Read more...
புதினப் பூங்கா 27/05/06
Written by James Prabaharan   
Saturday, 27 May 2006
மதுவும் மாதும்

Image குடி குடியைக் கெடுக்கும் என்கிறார்கள். இப்பொழுது ஓர் ஆராய்ச்சியின் முடிவில் அது ஆண்களை அல்ல. பெண்களைத்தான் அதிகமாகக் கெடுக்கும் என்கிறார்கள்.  புதுமையாக இருக்கின்றதா? டென்மார்க்கில் இடம்பெற்ற ஓர் ஆய்வின் முடிவில்தான் இப்படிச் சொல்லியிருக்கின்றார்கள்.  தினமும் மது அருந்தும் ஆண்களுக்கு, இருதய வியாதிகளின் தாக்குதல்களில் இருந்து 41 வீதமான மீட்சி கிடைக்கின்றதாம். வாரம் ஒரு முறை மாத்திரம் மது அருந்துபவர்களுக்கோ, இந்த அளவு 7 வீதமாகக் குறைகின்றது என்கிறார்கள். இதே சமயம் வாராவாரம் மது அருந்தும் பெண்களுக்கோ, ஆண்களுடைய அளவில் மூன்றிலொரு பகுதியே குறைய வாய்ப்பு உண்டாகின்றது என்கின்ற ஆய்வாளர்கள், தினசரி பெண்கள் மது அருந்தினால், எந்த மாற்றமும் அவர்களுக்கு வரப்போவதில்லை என்றும் கூறுகின்றார்கள்.
Last Updated ( Thursday, 08 June 2006 )
Read more...
இங்கே இவர்கள் இப்படி - இந்தோனேஷியா
Written by James Prabaharan   
Monday, 22 May 2006
அருவருக்க வைக்கின்ற அலங்கோலங்கள்
 
உலகத்தின் தொன்மையான தொழில் என்னவென்று கேட்டால், உங்கள் பதில் என்னவாக இருக்கும்?
இன்று உலக நாடுகளெங்கும் கொடிகட்டிப் பறக்கும் சதை வியாபாரந்தான், மிகப் பழமை வாய்ந்த வியாபாரமாக இருந்து வருகின்றது. ஒரு பெண்ணின் உடல் மீதான மோகம், உலக நாடுகளெங்கும், பல வன்முறைகளுக்கு தூபம்போட்டு வருவதோடு, பல போர்களும் வெடிக்க வைத்திருக்கின்றன. காலத்தால் அழியாத இந்த மோகம், அன்று இருந்ததுபோல, இன்றும் என்றும் தொடரத்தான் போகின்றது. இன்றைய நவீன யுகத்தில், இந்த உடல் மோகம் என்பது பல ரூபங்களில் வெளிப்பட்டு, கலாச்சாரச் சிதைவுகளுக்கு வழிவகுத்து வருகின்றது. கட்டிய மனைவியை வைத்துக்கொண்டு, பல பெண்களோடு தொடர்பு கொள்வதும், ஓரினச் சேர்க்கையில் பெருவிருப்பும், அதையும் கடந்து ஓரினச் சேர்க்கை திருமணத்தில் முடிவதுமாக, இன்றைய கோலங்கள், அருவருக்கத்தக்க அலங்கோலங்களாக மாறியிருக்கின்றன.
Last Updated ( Tuesday, 23 May 2006 )
Read more...
மண்ணாவோம் ஒரு நாள்
Written by James Prabaharan   
Monday, 22 May 2006
சுவைஒளி ஊறுஓசை நாற்றமென்று ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு             என்கிறார் வள்ளுவர்.
நமமால் முடிகின்றதா? ஐம்பொறிகளையும் அடக்க நம்மால் முடிகின்றதா? உலகம் நம் வசப்படவேண்டுமானால் இந்தப் புலனடக்கம் தேவை என்கிறார் வள்ளுவர். முடிகின்ற காரியமா?
மண்ணாசை, பெண்ஆசை, பொன் ஆசை என்று மூன்று பேராசைகளும் வாழ்வில் நம்மை ஆட்டுவித்த வண்ணமாகவே இருக்கின்றன.
இந்த மண்ணின் பக்கம் சற்றே நம் பார்வையைத் திருப்புவோமா? மண் ஆசையினால், ஊர் மண்ணில் வேலிச்சண்டைகளில் இருந்து தற்காலிமாக மீண்டு, வேலிகளே இல்லாத ஒரு மண்ணில் நம் மாறுபட்ட வாழ்க்கையை ஆரம்பித்திருக்கின்றோம். சொந்த மண்ணில் இரத்த ஆறு ஓடுவது, நம்மை இன்னொரு மண்ணிற்கு விரட்டியடித்திருக்கின்றது.
Read more...
இங்கே இவர்கள் இப்படி - நியூசிலாந்து
Written by James Prabaharan   
Tuesday, 16 May 2006
Imageஏதோவொரு குறியோடு, மனிதன் வாழ்வில் செய்ற்படும்போதுதான், அவன் வாழ்வில் சூடுபிடிக்கின்றது. தன் எதிர்பார்ப்பு எப்படியாவது நிறைவேறி விடவேண்டும் என்ற அவனது வெறி, பல வழிகளையும் கையாண்டு, தன் குறிக்கோளை அடைய முனைகின்றது. அவன் வாழ்விலும் ஓர் அர்த்தம் தெரிகின்றது. தன் இலட்சியம் நிறைவேறும்போது, அவன் தாங்கொணாப் பெருமிதம் அடைந்து விடுகின்றான். தன் சொந்த முயற்சியினால், பெரிய சாதனையையைச் செய்துவிட்டேனே என்ற அகமகிழ்வும் ஏற்படுகின்றது.

எல்லோருமே தமது குறிக்கோள்களை அடைவதில் வெற்றிபெறுவதில்லை என்றாலும், இப்படியான செயற்பாடுகள், அவன் வாழ்விற்குச் சுவை சேர்க்கத் தவறுவதில்லை.
எவரெஸ்ட் மலை உச்சியை அடையது என்பது வெறும் பகற் கனவாக இருந்த காலம் மலையேறி, இப்பொழுது உலகின் அந்த அதிஉயர்ந்த உச்சியில் மனிதன் கால் பதித்த காலமும் வந்துபோய்விட்டது. இப்பொழுதோ புதிய செய்தியாக, இரண்டு கால்களுமே இல்லாத ஒருவர், எவரெஸ்ட் மலைஉச்சியை அடைந்த தகவல், பலரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கின்றது. ஆச்சரியம் ஆனால் உண்மைதான்.
Last Updated ( Friday, 19 May 2006 )
Read more...
புதினப் பூங்கா 15/05/06
Written by James Prabaharan   
Monday, 15 May 2006
நடையா இது நடையா?

Image 190 கிலோ எடையுடன் ஒரு சுகதேகியாக நடமாடமுடியும் என்பது முடியாத காரியந்தான். இதற்கு என்ன செய்யலாம்? நடடா ராஜா நடடா. கலிபோர்னியாவிலிருந்து நியூகோர்க் வரை பொடிநடையில் சென்றால் நடைக்கு நடையும், எடைக்கு எடையும் என்று அவர் நினைத்தாரோ தெரியவில்லை. நடக்கத் தொடங்கிவிட்டார். 13 மாதங்கள் நடந்து முடிந்தபோது, இவரது எடை 45 கிலோவிற்கு மேலாகக் குறைந்து,  இவருக்கு சந்தோஷத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. இந்த அமெரிக்கருக்கு வயது 40. தன்னுடைய நெடும் நடைப் பயணத்தின் முடிவில், எடையைக் குறைக்கும் ரகசியம் தனக்குத் தெரிந்திருக்கின்றது என்று குதூகலமாகக் கூறியிருக்கின்றார். இவரது சந்தோஷம் , ஒரு புத்தகம் எழுதும் ஆர்வத்தையும் இவரிடம் ஏற்படுத்தியிருக்கின்றது. இவர் மொத்தமாக 4800 கி.மீற்றர் (3000 மைல்) தூரத்தை நடந்து முடித்தபோது, இவரைப் பல பத்திரிகையாளர்கள் சூழ்ந்து பேட்டிகண்டுள்ளார்கள். ஓர் இராணுவ வீரரும், இரண்டு பிள்ளைகளின் தந்தையுமான Steve Vaught, ஒரு விபத்தின் பின்னர், மனமுடைந்த நிலைக்குத் தள்ளப்பட்டதோடு, ஒழுங்கற்ற முறையில் உண்ணவும் ஆரம்பித்துள்ளார். இதன் காரணமாகவே இவர் உடல் பருத்து , எடை அதிகரித்தது. நடப்பதன் மூலம் எடையைக் குறைத்து விடலாம், என்ற அவர் தன்னனம்பிக்கையும்,  அவரது முயற்சியும், அதைத் தொடர்ந்த வெற்றியும் பாராட்டுக்குரியதுதான்.
Last Updated ( Saturday, 20 May 2006 )
Read more...
காசா லேசா? காசாலே சா!
Written by James Prabaharan   
Friday, 12 May 2006
காசேதான் கடவுளப்பா. அந்தக் கடவுளுக்கும் அது தெரியுமப்பா….. மிகப் பழைய திரைப்படம் ஒன்றில் பாடப்பட்ட வரிகள் இவை. ஏறத்தாழ 50 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும், இந்தப் பாடலின் வரிகள் நமது காதுகளில் பெரிதாக ரீங்காரிக்கின்றன. பணம் பத்தும் செய்யும் என்ற நிஜத்தைப் பறைசாற்றுகின்றன. பணம் இல்லையென்றால் மனிதன் நடமாடும் பிணந்தான், என்று அடித்துச் சொல்கின்றன.
பணம்தான் வாழ்க்கையா?
நாலு காசு சம்பாதிக்க நமக்கு வக்கில்லையென்றால் நாம் வாழ்க்கையில் செல்லாக்காசுதான். நம்மை சமுதாயம் மெல்ல மெல்ல புறக்கணிக்க ஆரம்பித்து விடுகின்றது. மனிதனின் மதிப்பை, இந்த நாலுகாசுதான் அளவிடுகின்றது என்று சொல்லவரும்போது பணம்தான் வாழ்க்கை என்றுதானே நினைக்கத் தோன்றுகின்றது?
பணம் பந்தியிலே குணம் குப்பையிலே என்று சொல்லி வைத்தவர்கள் நமது மூதாதையர்கள். பணம் இல்லாத நிலையில், சமுதாயத்தால் ஒதுக்கப்பட்ட கசப்பான அனுபவந்தான், அவர்களை இப்படிச் சொல்ல வைத்திருக்கின்றது போலும். நல்ல குணசாலிகளை, பணப்பிசாசு அடித்துக் கொண்டு போய்விடுகின்றது என்பதையே அவர்கள் சொல்ல முனைந்திருக்கின்றார்கள்.
Last Updated ( Friday, 19 May 2006 )
Read more...
தேக்கநிலை தவிர்ப்போம் ஊக்கநிலை தேடுவோம்
Written by James Prabaharan   
Monday, 08 May 2006
பாம்புக்கு பல்லில் விடம். மனிதனுக்கோ சொல்லில் விடம் என்கிறார்கள். இன்னாரு மண்ணில் வாழ வந்துவிட்டோம். நம்மைச்சுற்றி, வேறுபட்ட பல மனிதர்கள் நடமாடுவதையும் கண்டுகொண்டிருக்கின்றோம். இவர்களில் பலர் நச்சுப் பாம்புகளாக நடமாடிக் கொண்டிருப்பதை நம்மால் அறிந்து கொள்ள முடிகின்றதா? நுனி நாக்கில் அமிர்தமும்;, அடிநாக்கில் கொடிய விடமும் வைத்துக் கொண்டு, நம்முடன் கலந்துறவாடும் நயவஞ்சகர்களை நம்மால் இனங்கண்டு கொள்ள முடிகின்றதா? பல தடவைகளில் நாம் தோற்றுப் போகின்றோம் என்பதே யதார்த்தம்.
இந்த நஞ்சு என்பது நமது வாழ்க்கையில் இரண்டறக் கலந்திருக்கின்றது என்பதை யார் மறுப்பார்கள்? கால்ஙகாலமாக, இந்த நஞ்சு, நம் வாழ்க்கையின் வேறுபட்ட நிலைகளில் ஒட்டிக் கொண்டுதான் இருக்கின்றது. நாம் தாயின் வயிற்றிலிருந்து சிசுவாக வெளியேறும்போது, நச்சுக்கொடியுடன் கொண்டுள்ள உறவு, பின்பு கத்தரிக்கப்பட்டு விட்டாலும், நஞ்சு என்பது, நம் வாழ்நாட்களில் தொடரவே செய்கின்றது.
Last Updated ( Thursday, 11 May 2006 )
Read more...
அன்றும் இன்றும் - 07.05.06
Written by James Prabaharan   
Sunday, 07 May 2006
அன்று  மே 4: 2002
 
Image மிக இலாவகமாகச் சிறகடித்து, வானில் நிரை நிரையாகப் பறக்கும் புள்ளினங்களைக் கண்டபோது. வியப்பால் அவன் கண்கள் விரிந்தன. தனக்கில்லாத ஒரு தனித் திறமை, இந்தப் பட்சிகளிடம் இருக்கின்றதே என்று நினைத்து வியந்தான்.
வியந்ததோடு அவன் நிறுத்திக் கொள்ளவில்லை.
தன்னால் பறக்க முடியவில்லை என்றாலும், தன்னைச் சுமந்துகொண்டு பறக்கும் இயந்திரம் ஒன்றினைக் கண்டுபிடிக்கும் வேகம் அவனுள் தொற்றிக் கொண்டது.
விமானமும் பிறந்தது.
மனித கண்டுபிடிப்புகள், நமக்குப் பலவழிகளில் சாதகமாக அமைந்தாலும், அரிய பெரிய கண்டுபிடிப்புகளால், மனிதன் அழிந்தும் போவதை நம்மால் தடுக்க முடியவில்லை. அசுரவளர்;ச்சிக்கு நாம் கொடுக்கும் தீனியாகவே இதை நாம் நோக்கவேண்டியிருக்கின்றது.
Last Updated ( Monday, 08 May 2006 )
Read more...
<< Start < Previous 1 2 Next > End >>

http://www.tamilcyber.com/home, Powered by Mambo and Designed by SiteGround web hosting